அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
TAMIL MUSLIM MATRIMONY
தமிழக முஸ்லிம்களுக்கான இணையதள திருமண தகவல் சேவை மையத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்
1.இந்த இணையதளத்தில் பதிவு செய்யும் உறுப்பினர்களுக்கு அடிப்படை திருமண வயது 18 பூர்த்தி ஆகியிக்க வேண்டும்.
2, இது முழுக்க முழுக்க திருமண நோக்கத்திற்காக மட்டுமே இயங்கி வரும் தமிழக முஸ்லிம்களுக்கான பிரத்யேக இணையதளமாகும். ஆகவே இதில் யாரேனும் தவறான நோக்கத்தில் இத்தளத்தை பயன்படுத்த நினைத்தாலோ, இதிலுள்ள தொடர்பு விவரங்களை யாரேனும் வழிகேடான காரியங்களுக்கு பயன்படுத்த முயற்சி செய்தாலோ அவர்கள் மீது மாவட்ட காவல் அலுவலக Cyber crime பிரிவில் புகார் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.
3, மேலும் இதிலுள்ள உறுப்பினர்கள் யாரேனும் தங்களைப் பற்றிய தவறான தகவல்களை பதிவு செய்திருப்பதாக மற்ற பயனாளர்கள் புகார் அளித்தாலோ அல்லது Tamil Muslim Matrimony நிர்வாக கவனத்திற்கு தெரிய வந்தாலோ உரிய விசாரணைக்கு பின் அவர்களுடைய ID இத்தளத்திலிருந்து நிரந்தரமாக நீக்கப்படும்.
4,பயணாளர்களுடைய சுய விவரங்கள் மற்றும் தொடர்பு விவரங்கள் இத்தளத்தில் உறுதி செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கு மட்டுமே காண்பிக்கப்படும், இதை தவிர்த்து தங்களுடைய சுயவிவரங்கள் எதையும் எதிலும் வெளியிட மாட்டோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
5, பயனாளர்கள் அனைவரும் Tamil Muslim Matrimony வழியாக மணமகன்/மணமகள் வீட்டாரை தொடர்புக் கொண்ட பின்பு அவர்களைப் பற்றிய குடும்ப பின்புலன்களை தீர விசாரித்துக் கொள்வது தங்களுடைய முக்கிய கடமையாகும், ஆகவே அதையும் நினைவில் கொண்டு பெற்றோர்கள்/ பாதுகாப்பாளர்கள் கூடுதல் பொருப்புணர்வுடன் நடந்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
6, திருமணத்தின் போது வரதட்சணை என்பது நமது இஸ்லாமிய மார்க்க சட்ட அடிப்படையிலும், இந்திய குற்றவியல் சட்டத்தின் அடிப்படையிலும் தவறான காரியமாகும். ஆகவே பயணாளர்கள் அனைவரும் வரதட்சணையை தவிர்த்து நபிகள் நாயகம் (ஸல்) காட்டித் தந்த அடிப்படையில் மஹர் கொடுத்து, திருமணம் முடிப்பீர்கள் என்று நம்புகிறோம்.
நீங்கள் (மணம் செய்து கொண்ட) பெண்களுக்கு அவர்களுடைய மஹர் (திருமணக்கொடை)களை மகிழ்வோடு (கொடையாக) கொடுத்துவிடுங்கள் - அதிலிருந்து ஏதேனும் ஒன்றை மனமொப்பி அவர்கள் உங்களுக்கு கொடுத்தால் அதைத் தாராளமாக, மகிழ்வுடன் புசியுங்கள். (அல் குர்ஆன்-4:4)
அல்லாஹ் மணமக்கள் இருவரையும் இம்மையிலும் மறுமையிலும் ஒன்றினைத்து வைப்பானாக